திருக்குறளில் இல்லறமும் சொல்லறமும்
Abstract
திருவள்ளுவர் திருக்குறளில் “இல்வாழ்க்கை” எனும் ஐந்தாவது அதிகாரத்தில் தொடங்கி “புகழ்” என்னும் இருபதாவது அதிகாரம் வரை விரிவாக உணர்த்துகின்றார். எனினும் இல்லறத்தின் முக்கிய காரணிகளாக விளங்கும் கணவன், மனைவி, குழந்தைகள் எனும் மூவரின் பண்புகளையும், பெருமைகளையும் முதல் மூன்று அதிகாரத்தில் விவரிக்கிறார். அடுத்து வரும் பதினேழு அதிகாரங்களில் இவர்களோடு தொடர்புடைய சமூக மக்களையும் அவர்களுக்குரிய அறங்களையும் விளக்கியுள்ளார். எனினும் கணவன் மனைவி குழந்தைகள் என்னும் மூவரும் தனக்குரிய கடமைகளில் வழுவாமல் அறங்களைப் பின்பற்றி வாழும் சிறந்த இல்லறத்தை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
Copyright (c) 2025 பெ காளியானந்தம், கா கணநாதன்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.