இந்தியாவில் முன்பள்ளிக் கல்வி: இலக்குகளும் சவால்களும்
Abstract
குழந்தையின் உடல், அறிவாற்றல், உணர்ச்சி, சமூக வளர்ச்சிக்கு ஆரம்பகால குழந்தைப்பருவம் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இப்பருவத்தில் குழந்தையின் அதிகப்படியான செயலாற்றும் திறன் உச்சநிலையில் இருக்கும். ஒரு குழந்தைக்கு நல்ல சாதகமான சுற்றுப்புற சூழ்நிலை அமைந்திருந்தாலும் அக்குழந்தை குறிப்பிட்ட முதிர்ச்சி நிலையை அடையாமல் கற்க இயலாது. நல்ல வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் நல்ல சாதகமான சூழ்நிலை அக்குழந்தைக்க அவசியமாகிறது. “மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கான முன்பள்ளிக் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கும் நல்வாழ்வுக்கும் அடித்தளம் அமைக்கிறது.”1
“இந்தியாவில், ஏறக்குறைய 13% மக்கள் தொகை ஆறு வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், தரமான முன்பள்ளிக் கல்வியை உறுதி செய்வது ஒரு வளர்ச்சி சார்ந்த கட்டாயம் மட்டுமல்ல, ஒரு குறிப்பிடத்தக்க சவாலும் ஆகும்.”2 இந்த கட்டுரை இந்தியாவில் முன்பள்ளிக் கல்வியின் இலக்குகளையும் அவை எதிர் நோக்கம் சவால்களையும் அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஆராய்கிறது.
Copyright (c) 2025 T Vanitha Devi

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.