அகம் புறம் பேரானந்தம்
Abstract
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்பது ஞானியின் வாக்கு மனிதன் தன்னிடமுள்ள குறைகளை தன் முயற்சி, பயிற்சி என்ற வகையில் களையும் போது அவன் தெய்வமாகலாம். அத்தெய்வீக நிலையை அனைத்து மக்களும் அடைவதற்காக மனவளக்கலையை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ளார்கள். இந்த மனவளக் கலை யோகத்தில் அகம் என்ற உள்ளத்தையும், புறம் என்ற உடலையும் தூய்மை செய்து பேரறிவான வெளியுடன் இணைப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு வெளியுடன் இணையும் போது மனம் விரிந்து நம்மை சுற்றிலும் இருக்கும் வெளியே நமக்குள் அகமாக இருக்கும் உண்மையை உணரமுடியும் அண்டத்தில் இருப்பதை பிண்டத்தில் காணும் பேரானந்த நிலையை அடைய முடியும். புறம் என்பது உடல் என்ற நிலையில் நரகம் (நரூஅகம், நர-உடல், அகம்-மனம்). புறத்தை வெளி என்ற நிலையில் விரிக்கும் போது சுவர்கம் (சுவர் ூஅகம்). இந்நிலையே பேரானந்த நிலை. இத்தெய்வ நிலையை அடையவே மனிதன் பிறப்பெடுத்துள்ளான். இதனை என்றும் நினைவில் கொண்டு மனவளக்கலை யோகத்தின் மூலம் அனைவரும் பேரானந்த நிலையை அடைவோமாக.
This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.