பதினெண்மேற்கணக்கு நூல்கள் காட்டும் பண்பாட்டு மரபுகளும் இன்றைய சமூக நிலையும்
Abstract
பழங்கால மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் பண்பாட்டு பழங்கால மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் பண்பாட்டு கருவுலமே இலக்கியங்கள். அதில் சங்க இலக்கியம் மேன்மைமிகு கருத்துகளை விதைக்கும் நிலம், அவற்றையே நாம் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று குறிப்பிடுகிறோம். இப்படித் தான் வாழ வேண்டும் என்று முன்னோர்கள் வழிவகுத்த வரையறைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் வாழ கற்றுக் கொடுக்கும் தத்துவவியல் அறிஞர்கள் நம் இலக்கியப் புலவர்கள். எப்படியும் வாழலாம் என்பது மரபும் அல்ல பண்பாடும் அல்ல. படித்ததோடு நின்று விடாமல் வாழ்வியலோடு ஒட்ட ஒழுகுவோமாயின் இவ்வுலகம் நிலை பெற்று நிற்கும். பண்புடையவரகள் இவ்வுலகில் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாது இருக்கிறது. இதனை, வள்ளுவர். “பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மா#வது மன்" என்று குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் வாழ்ந்த மக்களிடம் நல்லொழுக்கம், நற்பண்புகள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு சீரும் சிறப்புமாக பேணப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய மக்களிடம் பண்பாடு இல்லாதது மனவருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. மரம் போல்வர் மக்கட்பண்பில்லாதவர் என்ற குறளும் பண்பாடு இல்லையென்றால் பாரதம்இல்லை என்ற வைரமுத்துவின் வரியுமே நினைவுக்கு வருகிறது. பண்பு இருந்தால் தான் மனிதநேயம் பாழ்படாமல் காக்க முடியும். எனவே பண்பாடு பற்றி பதினெண் மேற்கணக்கு நூல்கள் தரும் செ#திகளையும் இன்றைய சமூகநிலைப் பற்றியும் ஆரா#வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Copyright (c) 2025 மு. கீதா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.