சங்க காலத்தில் ஆட்சிசெலுத்தும் நெறிமுறைகள்
Abstract
சமுதாயம் என்பது மக்களின் கூட்டுத்தொகுதி ஆகும். அச்சமுதாயத்தில் பல்வேறுப்பட்ட மக்கள் இனங்களும் தொழில்வயப்பட்ட பிரிவுகளும் சமுதாயம் என்பது மக்களின் கூட்டுத்தொகுதி ஆகும். அச்சமுதாயத்தில் பல்வேறுப்பட்ட மக்கள் இனங்களும் தொழில்வயப்பட்ட பிரிவுகளும் காணப்பட்டன. அவற்றுள் சிலபிரிவினரே சமுதாய மதிப்பு மிக்கவர்களாக திகழ்கின்றனர். பண்டைத் தமிழ் சமுதாயத்தில் சமுதாய மதிப்பு மிக்கவர்களாக திகழ்ந்தவர்களுள் அரசர், அந்தணர், முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். இதில் தலையிடத்தையும், சிறப்பான இடத்தையும் பெறுபவன் அரசன். இவன் வீரத்தை அடிப்படையாகக் கொண்டு அரசுகள்நிலைபெற வேண்டிய காலகட்டத்தில் அரசனின் சிறப்பு சமுதாய மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்டது. தனி மனிதரின் வலிமை, திறமை, வீரம், மனத்தின்மை ஆகியப்பண்புகளில் சிறந்து விளங்கியவன் ஆட்சி செ#யும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை பல வகுத்துள்ளன. அவற்றைபின்பற்றினால் என்னவாகும், பின்பற்றாவிட்டால் என்னவாகும் என்பதையும்ஆட்சி செலுத்தும் நெறிமுறைகள் ஆகியவற்றை சங்கப் பாடல்கள், திருக்குறள் போன்ற நூல்களில் இருந்து கீழ்கண்டவாறு காணலாம்.
Copyright (c) 2025 பெ ராஜேந்திரன்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.