ஆற்றுப்படையும் முருகனும்
Abstract
நம் பண்டைக்காலத் தண்டமிழ்ச்சான்றோர், அரிய நுண்கலைச் நம் பண்டைக்காலத் தண்டமிழ்ச்சான்றோர், அரிய நுண்கலைச் செல்வரா#த் திகழ்ந்திருந்தனர். அவர்கள் உள்ளுவனவெல்லாம் உயர்வையேஉள்ளினர். அவ்வாறு உள்ளி உணர்ந்து உணர்ந்து தெள்ளத் தெளிந்த பொருள், முருகு என்பது. இம்முருகு என்னுஞ் சொல்லுக்குக் கடவுட்டன்மை, இளமை, மணம், அழகு முதலிய பொருணிலை கண்டனர். இப்பொருளில் பொதிந்து கிடக்கும் நுண்பொருள் கந்தழி என்னும் கட்டற்ற ஒன்று. அஃதே என்று முள்ள இயற்கை. அவ்வியற்கையே இறைமையென்னும் செம்பொருள் & செழும்பொருள். இவ்வியற்கைக் கனிவைப் & பிழிவை & இறையை, நாட்டினும் காட்டினும் மலையினும் கடலினும் வைத்துப் போற்றினர் நம் பழந்தமிழர் மக்கள். இவற்றுள் மலையில் வைத்துப் போற்றப்பட்டவனே சேயோன் என்னும் முருகு. இம்முருகே முருகன் எனப்பட்டான். முருகன் அழகன், என்றும் இளையவன். தமிழ்க் கடவுளாகிய முருகனை வணங்கியோர், எல்லா நலன்களையும் பெற்று வாழ்வதை நாம் உணர்வோம். அத்தகைய முருகனின் பெருமையை எடுத்தியம்பும் ஆற்றுப்படைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Copyright (c) 2025 மு பார்வதி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.