கானகன் நாவலில் பளியர் இனமும் இயற்கை பேரழிவும்
Abstract
இவ்வுலகில் வேறு எந்த இனக்குழுவிற்கும் அல்லது வேறு எந்த மொழி பேசும் மக்கள் திரளுக்கும் இல்லாத தொன்மையும் பாரம்பரியமும் பண்பாட்டின் உச்சமும் தமிழ் சமூகத்திற்கு உண்டு. இத்தகைய தமிழ்ச் சமூகமானது உணவு, உடை, உறையுள், பழக்கவழக்கம், நம்பிக்கைகள், சமயம் முதலான பல்வேறு பரிமாணங்களில் தனது பண்பாட்டின் முதிர்வை
வெளிப்படுத்தி வருகிறது. ஆதித் தமிழ்ச் சமூகம் இயற்கையுடன் இயைந்தே தனது அனைத்து வித செயல்பாடுகளையும் நகர்த்தியுள்ளது. இயற்கையுடன் இணைந்த வாழ்வியல் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்ச் சமூகம் இயற்கையை தனது தெ#வமாக்கி அதனை வழிபட்டு வந்துள்ளது. இவ்வாறாக ஐம்புதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றுள் மனிதன் சுவாசிக்கும் காற்று உருவாவதற்கு தேவையான மரங்கள் வெட்டப்படுவதையும், மரங்கள் நிறைந்த காடுகள் அழிக்கப் படுவதையும் காட்டையே வாழிடமாகக் கொண்ட பளியர் இன மக்களும், காட்டில் வாழக்கூடிய வனவிலங்குகள் பாதிப்படைவதையும் கானகன் நாவல் வழி ஆரா#வதாகக் இக்கட்டுரை அமைந்துள்ளது.
Copyright (c) 2025 ரா சித்திரகலா, வெ திலகம்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.