சிறுபாணாற்றுப்படையில் பாணர்களின் வாழ்க்கை

  • வெ திலகம் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை ஆய்வு மையம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), குற்றாலம்

Abstract

எங்கே செல்வது என ஏங்கி இருப்பவர்களைக் கண்டு அங்கே எங்கே செல்வது என ஏங்கி இருப்பவர்களைக் கண்டு அங்கே செல்லுங்கள், உங்களுக்கு வேண்டியது கிடைக்கும் என ஆற்றப்படுத்துவது ஒரு சிறந்த பண்பு. அந்தப் பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது சிறுபாணாற்றுப்படையாகும். இந்நூலில் கூறப்பட்டுள்ள பாணர்களைப் பற்றி இங்கு ஆராய்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைந்துள்ளது. சங்ககாலத்தில் பண்ணினைப் (இராகத்தினை) பாடுவோர் பாணர் என அழைக்கப்பட்டனர். இப்பாணர்களை இசைப்பாணர் (பாடுபவர்), யாழ்ப்பாணர் (யாழ் வாசிப்பவர்), மண்டைப்பாணர் (பிச்சை கேட்டுப் பிழைக்கும் பாணர்) என மூன்று வகையானவர்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. சிறுபாணாற்றுப்படையில் இன்குரல் இடவயின் தழீஇ என வருகின்ற பாடலை நோக்குங்கால் பாணர்களின் பாகுபாட்டினை அறிய முடிகின்றது. சிறுபாணாற்றுப்படை முழுவதும் நல்லியக் கோடனின் பரிசில் பெற்றுத் திரும்பிய பாணர்களின் கூற்றாகவே அமைந்துள்ளது. இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என அறிய முடிகின்றது.

Published
2025-08-11
Statistics
Abstract views: 6 times
PDF downloads: 4 times