கவிஞர் வில்லவனின் கவிதைகளில் இயற்கைச் சித்தரிப்பு

  • இர இராஜேஷ் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செந்தூர்

Abstract

இலக்கியப் படைப்பு உண்மையானது. இலக்கியம் கூறுகின்ற கவிஞனது சிந்தனைகளும் உண்மையானவை. உண்மையைக் கூறும் கவிஞனுக்குப் பல பார்வைகள் உண்டு. அவற்றைத் தன் அறிவுப் புலனுக்கு ஏற்ப அவன் பயன்படுத்திக் கொள்கின்றான். இதனால் கவிதைப் படைப்பு கவிஞனைக் கடந்து பயணிக்கிறது. அனது இலக்கியப் பார்வை சிறந்த இலக்கியத்தைப் படைக்கச் செய்கிறது. சமுதாயப் பார்வை இலக்கியத்தில் சமுதாயத்தை உருவாக்குகிறது. இயற்கைப் பார்வைக் கற்பனையைத் தூண்டச் செய்கிறது. அகப்பார்வை வாழ்வு குறித்த தேடலை மேற்கொள்கிறது. இயற்கைப் 
பார்வையும், அகப்பார்வையும் கவிதைக்கு அழகைத் தருகின்றன. அவற்றைப் பார்க்கும் கவிஞனது பார்வைக்கு இலக்கிய உலகில் சிறந்த இடம் உண்டு. இயற்கையைப் புனையும் ஆற்றல் எல்லா கவிஞர்களுக்கும் வாய்ப்பதில்லை. இயற்கையுடன் ஒன்றிணைந்து அதனை ஆழ்ந்து அனுபவிக்கும் கவிஞனுக்கே அது வாய்க்கும். அத்தகைய கவிஞர்களில் ஒருவராகக் கவிஞர் கீழ்குளம் வில்லவனைப் பார்க்க முடியும். கலை வாழ்க்கைக்காக என்பதிலும் சமுதாயத்தைக் கவிஞர்கள் பாடவேண்டும்
என்பதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும் இயற்கையின் பார்வை அவரது கவிதை புனைவுகளில் தானாகவே இடம்பெற்று விடுகின்றன. அவற்றை இக்கட்டுரை வெளிக்காட்டுகிறது

Published
2025-03-21
Statistics
Abstract views: 5 times
PDF downloads: 3 times