புறநானூற்றில் சிறுதானியங்கள்
Abstract
தொடக்கக்காலச் சமுதாயத்தில் இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்த மனிதர்கள் பின்பு ஆயுதங்களின் உருவாக்கத்தினாலும், அதன் பயன்பாட்டினாலும் வேட்டையாடி உணவு உண்ணத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக
பன்றி உழுத நிலங்களில் பயிரிடுதல், எரிபுனச்சாகுபடி முதலிய முறைகளினால் தொடக்ககால வேளாண்மை முறைகளை கற்று உணவு உற்பத்திகளை பெருக்கினர். அதனால் பண்டைக்கால மக்களின் உணவுகளில் தானியங்களும், சிறுதானியங்களும் முதன்மை இடங்களை பெற்றிருந்தன. குறிப்பாக சிறுதானியங்கள் பராம்பரிய உணவுகளுள் இடம்பெற்று, உடலுக்கு அதிகளவு சத்துக்களை வழங்குவனவாக உள்ளன. இன்றைய வாழ்வியலில் துரித
உணவுகளிடையே, பண்டைய உணவுமுறைகளும், சிறுதானியங்களும், அரிதாகவும் அருமருந்தாகவும் உட்கொள்ளப்படும் நிலைகளே காணப்படுதலால் சிறுதானியங்களின் பயன்பாட்டினை எடுத்துரைப்பது அவசியமாகிறது. அவ்வகையில் சங்க இலக்கிய புறநானூற்றில் இடம்பெற்றுள்ள சிறு தானியங்களை ஆராய்ந்து வெளிப்படுத்துவதும், அவற்றிலிருந்து மாறுபட்டுள்ள இன்றைய பிறழ்வுமுறை உணவுகளை எடுத்துரைப்பதும் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கங்களாக அமைந்துள்ளன.
Copyright (c) 2025 தா ஷமிலா ஜோஸ்டர்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.