சங்க இலக்கியங்களில் வாழ்வியல் அறங்கள்
Abstract
இலக்கியம் என்பது வாழ்வின் வெளிப்பாடு. இலக்கியத்தின் வழியாக வெளிப்படும் வாழ்வானது சமூகத்தின் நிலையையும் ஒருங்கே கொண்டது. சங்க இலக்கியத்தில் இவ்விரண்டும் பொதிந்துள்ளது. இந்த அறங்கள் கடந்த கால வாழ்வின் அனுபவமாகவும், நிகழ்கால வாழ்வின் சாட்சியாகவும், எதிர்கால வாழ்விற்கான ஆலோசனையாகவும் இருக்கின்றன. மக்களின் உயர்ந்த பண்பானது அறம் சார்ந்த வாழ்வியல் முறையால் வெளிப்படும் நாம் செய்யும் அறங்களே நம்மை பாதுகாக்கும் அரணாக அமைகிறது. இலக்கியம் என்பது கடந்த காலத்தை மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் அர்த்தம் கொடுக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். அவ்வகையில் நம் முன்னோர்கள் கடைபிடித்த அறங்களை சங்க இலக்கியங்கள் வழி அறியலாம். சங்க இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் கடைப்பிடித்த நெறிமுறைகளையும், அரசியல் பண்பாடுகளை நமக்கு தெற்றன காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. சங்க இலக்கியங்களை இயற்றிய புலவர்கள் காதலையும், வீரத்தையும் எடுத்துரைத்தனர். அதன் அடிப்படையில் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ள அறக்கருத்துக்களை ஆராய்கிறது இக்கட்டுரை.
Copyright (c) 2025 ப வள்ளிநாயகி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.