புறநானூறு காட்டும் வீரம்
Abstract
சங்க காலத்தில் மக்கள் காதல், வீரம் இவற்றை இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தனர். வீரத்தில் சிறந்த ஆண்மகனைத் தான் ஒரு பெண் திருமணம் செய்து கொள்வாள். அத்தகைய நிலை தான் சங்க காலத்தில் இருந்தது. ஒரு தாய் ஆண் மகனைப் பெற்றெடுத்து, ஆளாக்கி வீரத்தில் சிறந்தவன் ஆவதற்குரிய ஊக்கத்தையும், துணிச்சலையும் கற்றுக் கொடுப்பாள். அதன் மூலம் அவன் போர் களத்திற்குச் சென்று போரில் வெற்றி பெற வேண்டும் அல்லது போரில் விழுப்புண் பட்டு இறக்க வேண்டும். இதைத் தான் அந்த தாய் பெருமையாகக் கருதுவாள். இத்தகைய பெருமைக்குரிய பெண்களின் வீரத்தையும், ஆண் மகனின் வீரத்தையும் பற்றி எட்டுத்தொகை நூலிலுள்ள புறநானூறு நமக்கு எடுத்துக் கூறுகிறது. இத்தகைய வீரத்தைப் பற்றி தான் ஆய்வு மேற்க்கொள்ளப் படுகிறது.
Copyright (c) 2025 ச வேளாங்கண்ணி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.