சித்தர் பாடல்களில் தனிமனித ஒழுக்கச் சிந்தனைகள்
Abstract
தமிழில் காலந்தோறும் ஏற்பட்ட பதிவுகளில் சித்தர்களின் சிந்தனைப் தமிழில் காலந்தோறும் ஏற்பட்ட பதிவுகளில் சித்தர்களின் சிந்தனைப் பதிவும் குறிப்பிடத்தக்கது. சித்தர் இனம் நீண்ட நெடுங்காலமாக இந்த நிலத்தில் வேரூன்றி விழுது பரப்பி வருகிறது. “மூலன் மரபில் வந்த நான் ஒரு சித்தன்” என்று பாரதி தன்னைச் சித்தர் பரம்பரையில் இணைத்துக் கொண்டு பெருமைப்படுகிறார். பட்டினத்தாரும், தாயுமானவரும், வள்ளலாரும்சித்தர் தத்துவங்களைக் கோட்பாடுகளாக்கிக் கொடுத்தவர்கள் என்பதனை இலக்கிய வரலாறுகள் இயம்புகின்றன. உள்ளொளி பெற்ற சித்தர்கள் உண்மையை உணர்ந்து ஊருக்கு உபதேசம் செய்தனர். மெய்ஞ்ஞானம் மேவியோர் மேதினியில் ஐம்புலன் நுகர்வுகளை, ஆசாபாசங்களை, நலந்தீங்குகளை, அவலங்களைத் தத்துவப் பாடல்களாக வகுத்தனர். புரியும் மொழி, புரியாத கருத்துக்கள் பேச்சு வழக்குத் தமிழில் பேருண்மைகளைப் பொதிந்து வைத்துள்ளனர். முப்பாழ், சாதிக் குதிரை, மாங்காய்ப்பால், தேங்காய்ப்பால் என்பன போன்ற குறியீட்டுச் சொற்களும் பல்வகைக் கருத்துக்களுக்கு இடமளிக்கின்றன. சித்தர்கள் கையாண்ட குறியீட்டுச் சொற்களுக்குத் தனி அகராதியே தேவைப்படுகிறது. கருத்து நுட்பங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் சித்தர் பாடல்கள் போற்றப்பட்டு வந்துள்ளன. மேன்மைமிக்க சித்தர்கள் பாடல்களில் தனிமனித ஒழுக்கச் சிந்தனைகளை முன்னெடுப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
Copyright (c) 2025 க. கல்யாணசுந்தரி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.