சங்க இலக்கியங்களில் ஒலிக்குறிப்புச் சொற்கள்
Abstract
பண்டைத் தமிழர்கள் இயற்கையைப் புரிந்துகொண்டு, இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். இயற்கையைக் கடவுளாகவும் வணங்கி வந்தனர். கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய பழந்தமிழர், தம்மைச் சுற்றி ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக் கொண்டனர். ஒலிகளின் நுட்பமான வேறுபாடுகளைக் கண்டறிந்து, புரிந்து அவற்றைத் தம் பாடல்களில் பதிவுசெய்து வைத்துள்ள அவர்களின் அறிவுத்திறன் போற்றத்தக்கது. சங்கச் சான்றோர் தமது பாடல்களில் செவியாரத் துய்த்து உணர்த்திய ஒலிக்குறிப்புச் சொற்களை இவ்வாய்வு விரிவாக ஆராய்கிறது..
Copyright (c) 2025 செ முத்துமாரி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.