தமிழர் மரபில் விருந்தோம்பல்
Abstract
விருந்து விருந்தினர் விருந்தோம்பல் என்ற பண்பாட்டுத் தொடர்வினைகள் சங்கப்பாக்களில் அடையாளப்பட்டுள்ளன. சங்க அக இலக்கியம் சுட்டும் இல்லறத்தில் கணவனும் மனைவியும் ஆற்ற வேண்டிய அறமாக “விருந்தோம்பல்” சுட்டப்பட்டுள்ளது. கற்பொழுக்கத்தின் பயன் பற்றி கூறும் தொல்காப்பியர் அறம “புரி சுற்றமொடு சிறந்தது பயிற்றல் என்று “விருந்தோம்பும்” பாங்கினை வலியுறுத்தியுள்ளார். விருந்தோம்பலில் உணவு முறையானது குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் என்ற நில அமைப்பிற்கு ஏற்றவாறு மாறுபட்டு அமைந்துள்ளது. சுற்றம் ஓம்பலும், ஈகையும் கூட விருந்தோம்பலின் பாற்பட்டதே என்பது சான்றுகளின் வழி அறியத்தக்கது. பழந்தமிழரின் உயரியப் பண்பாடு விருந்தோம்பல்தான் என்பதனை சங்க இலக்கியம் தெளிவுறுத்துகின்றது.
Copyright (c) 2025 த. சந்திரா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.