ஐந்திணைகளில் தலைவி
Abstract
இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை முறைகளை எதிரொலித்துக் காட்டும்இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை முறைகளை எதிரொலித்துக் காட்டும் தன்மையுடையது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல்கூறுகளை அந்தக் காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் பிரதிபலித்துக்காட்டுகின்றன. இலக்கியங்களின் துணை கொண்டு மனித சமூகத்தின்படிநிலை வளர்ச்சியினை எளிமையாகக் கண்டறியலாம். சங்ககாலத்தில்பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது. பெண்கள் கற்புடையவர்களாகவும், கணவனைத் தெ#வமாகத் தொழுபவர்களாகவும், உடன்கட்டை ஏறுதலும், கைம்மை நோன்பு இருத்தலுமாகிய பண்பினை உடையவர்களாகவும்இருந்தனர். கணவனின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுதலேபெண்களின் பொதுவான வாழ்வு முறையாக இருந்துள்ளது. சங்ககாலப்பெண்கள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, அடக்கம், பொறுமை, இரக்கம்போன்ற பண்புகளுடன் அழகு கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பதற்குச் சங்கப் பாடல்கள் சான்றாக விளங்குகின்றன. ஐந்திணைகளில் தலைவிபற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
Copyright (c) 2025 தி. விஜி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.