தண்டி போற்றும் தெய் வங்கள்
Abstract
அணி இலக்கணம் மொழியின் அழகை விளக்குவதோடு அதைப் பயில்வோருக்குத் திறமையாகப் பேசவும், நாகரிக மொழிநடைக்கும் நாகரிகம் அல்லாத மொழிநடைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை அறிய துணை புரிகின்றது. மேலும், வாக்கியங்களில் உள்ள நுட்பமான பொருளை உணரவும் சிறந்த நூல் இயற்றவும் பயன்படுகின்றது. கி.பி.11&ஆம் நூற்றாண்டில் வீரசோழியத்திலும் அதன் உரையிலும் அணியிலக்கண சிந்தனைகள் இயற்றப்பட்டிருப்பினும், அணி இலக்கணத்தைத் தனியே விளக்குதல் எனும் மரபு கி.பி.12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தண்டியலங்காரத்திலிருந்தே
தொடங்குகிறது. தண்டியலங்காரம் போன்றே மாறனலங்காரம், சந்திரா லோகம், குவலயாநந்தம் முதலான நூல்கள் அணியிலக்கணத்தைத் தனியே விளக்கியுள்ளன. அணியிலக்கணங்கள் பெரும்பாலும் அகப்புற இலக்கியங்களை
உதாரணங்களாகப் பெற்று இயற்றப்பட்டு வந்துள்ளன. சில அணி இலக்கணங்கள் பக்திநெறி சார்ந்த கருத்துக்களையும் ஆங்காங்கே தொட்டுச் சென்றுள்ளன. அவ்வகையில் தண்டியலங்காரத்தின் நூலாசிரியர் தாமே இயற்றிய பாடல்களை மேற்கோள்கள்களாக இணைத்துள்ளார். இந்நூலில் காணலாகும் மேற்கோள் பாடல்களில் தெய் வங்களும் அவை சார்ந்த
தொன்மங்களும் இடம்பெற்றுள்ளன. தண்டியாசிரியர் காலத்து பக்தி நிலையை வெளிப்படுத்தும் இப்பாடல்களை ஆரா#வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Copyright (c) 2025 ர. திவ்யலட்சுமி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

